அதிமுகவிற்கு வெறும் 2 தொகுதிகள்? ... புதுச்சேரியில் கூட்டணிக்காக  விட்டுக் கொடுத்த எடப்பாடி... தொண்டர்கள் கடும் அதிருப்தி! 

 

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள 15-வது சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம், தொகுதிப் பங்கீடு அறிவிப்பால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று நள்ளிரவு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதன்படி, ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க தலைமையிலான மற்ற கட்சிகள் 14 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் பா.ஜ.க மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.

புதுச்சேரி அரசியலில் இருமுறை ஆளுங்கட்சியாகவும், பலமுறை கிங் மேக்கராகவும் வலம் வந்த அ.தி.மு.க-வுக்கு, வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இரட்டை இலை சின்னத்திற்கு புதுவையில் இருக்கும் செல்வாக்கை ரங்கசாமியும், பா.ஜ.க-வும் திட்டமிட்டு மறைக்கிறார்கள்" எனத் தொண்டர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த முறை 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியதே இந்த நிலைக்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், தொண்டர்களின் குமுறல் குறைந்தபாடில்லை.

இந்தச் சூழலில், புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். "கூட்டணி தர்மத்தைக் காப்பதற்காகவும், தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கிலும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடு இந்த 2 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் நிச்சயம் வெற்றி பெறும்" என அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், புதுச்சேரி சட்டசபையில் அ.தி.மு.க-வின் பலம் இந்தத் தேர்தலுக்குப் பிறகு எத்தகைய மாற்றத்தைச் சந்திக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!