கல்லூரி மாணவியைக் கடத்த முயன்ற கும்பல்: தடுத்த தாயைத் துடிதுடிக்கத் தீர்த்துக்கட்டிய கொடூரம்!

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே, தனது மகளைக் கடத்த முயன்றதைத் தடுத்த தாயைக் கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுவாசலைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷின் முதல் மனைவி காளியம்மாள் (44). இவரது மகள் சுபதர்ஷினி (18), செங்கல்பட்டில் உள்ள கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். சுரேஷின் இரண்டாவது மனைவி விஜயலட்சுமியின் தம்பியான விவின் (32), செங்கல்பட்டு மாவட்ட பாஜக அமைப்பு சாரா தொழிற்பிரிவு தலைவராக உள்ளார். இவர் சுபதர்ஷினியைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு பெண் கேட்டுள்ளார். ஆனால், காளியம்மாள் இதற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 13-ஆம் தேதி கல்லூரி விடுதிக்குச் சென்று கொண்டிருந்த மாணவி சுபதர்ஷினியை, விவின் தனது காரில் கடத்த முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்த மாணவி, தனது சொந்த ஊரான நெடுவாசலில் உள்ள தாயின் வீட்டிற்குத் தஞ்சம் புகுந்தார். ஆத்திரமடைந்த விவின், நேற்று அதிகாலை தனது நண்பர்கள் நான்கு பேருடன் காரில் நெடுவாசலுக்குச் சென்று, மாணவியைக் கட்டாயப்படுத்தி கடத்த முயன்றார். இதனைத் தடுக்க வந்த காளியம்மாளை, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விவின் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த காளியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடிய விவின் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிக்க வடகாடு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி வழியாக அவர்கள் தப்பிச் செல்வதை அறிந்த போலீசார், அங்கு காரை மடக்கிப் பிடித்தனர். கைதான விவின் உட்பட நான்கு பேரையும் வடகாடு காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காளியம்மாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்