பாலத்தின் விளிம்பில் சேர் போட்டு மசாஜ்! திகிலூட்டும் வீடியோ வைரல்!
சமூக ஊடக மோகத்தின் உச்சகட்டமாக ஒரு திகிலூட்டும் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. மிக உயரமான ஒரு பாலத்தின் நடுவில் இந்தச் சம்பவம் நடந்தது. பாலத்தின் நடுவில் இருந்த ஒரு சிறிய இடைவெளியில் ஒரு நாற்காலியை ஒருவர் வைத்துள்ளார்.
இந்த 51 வினாடி காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. "இது மிகவும் ஆபத்தானது இல்லையா?" என்ற கேள்வியையும் பகிர்ந்துள்ளவர் எழுப்பியுள்ளார். இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த காணொளியைப் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர். "இவ்வளவு உயரத்தில் நிற்க நினைத்தாலே தலை சுற்றுகிறது, இவர் இங்கு ஓய்வெடுக்கிறார்" என்று ஒரு பயனர் கருத்துத் தெரிவித்தார். "இத்தகைய ஆபத்தான சாகசங்களில் ஈடுபட வேண்டாம்" என்றும் பலரும் எச்சரித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!