undefined

2வது நாளாக புழல் ஏரி முழு கொள்ளளவில் நீடிப்பு: 300 கன அடி உபரிநீர் வெளியேற்றம்!

 

சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக நேற்று (டிசம்பர் 9) முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இன்றும் (டிசம்பர் 10) 2-வது நாளாக அதே நிலையில் நீடித்து வருகிறது.

3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி, தொடர்ந்து முழு கொள்ளளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஏரியின் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காக, அங்கிருந்து 300 கன அடி உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற மற்ற ஏரிகளிலும் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. உபரிநீர் வெளியேற்றம் தொடர்வதால், புழல் ஏரியின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!