சென்னை மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகார்: 6 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்!
சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி, ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இரவு, ‘கபடி வீரர்கள் கூட்டம்’ என்ற பெயரில் விடுதி அறையில் சில சீனியர் மாணவர்கள் ஒன்று கூடியதாக கூறப்படுகிறது. அப்போது 2021, 2022 ஆண்டு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவர், நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த அறைக்கு அழைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். அடிதடி நடந்ததற்கான நேரடி ஆதாரம் இல்லாவிட்டாலும், விசாரணையில் ஒழுங்கீன செயல் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி விதிகளை மீறியதாக சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, 6 சீனியர் மாணவர்களை மறு உத்தரவு வரும் வரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ராகிங் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என அனைத்து மாணவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் புகார்களால் சென்னை மருத்துவக் கல்லூரியில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!