undefined

 கொட்டும் மழையில் ராகுல் காந்தி  மாணவர்களுடன்   உரையாடல்!

 
 

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழாவில் அவர் கலந்து கொண்டார். விழாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, பள்ளியின் வளர்ச்சியை பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களுடன் ராகுல் காந்தி நேரடியாக உரையாடினார். நிகழ்ச்சி நடைபெறும் போது பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. ஆனாலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடியே மாணவர்களுடன் அவர் பேசினார்.

மாணவ, மாணவியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி ஆர்வத்துடன் பதிலளித்தார். இந்த உரையாடல் அனைவரையும் கவர்ந்தது. இதன் பின்னர், பள்ளிக்கு அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!