undefined

தேர்தல் ஆயத்தப் பணிக்காக ராகுல், பிரியங்கா தமிழகம் வருகை! 

 

 

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மற்றும் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 60 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மாவட்ட தலைவர்கள் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் செயல்பாடுகள் 6 மாதங்கள் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், 2025ம் ஆண்டு காங்கிரஸ் மறு கட்டமைப்புக்கான ஆண்டு என்றார். தமிழகம் முழுவதும் கிராம கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பங்கேற்பார்கள் என்றும் கூறினார். கூட்டணி குறித்த அறிவிப்பை தேசிய தலைமைதான் வெளியிடும் என்றும், தேர்தல் பணிக்காக ராகுல், பிரியங்கா தமிழகம் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!