undefined

ஐபிஎல் முன்  அதிர்ச்சி… ராகுல் சாஹர் விவாகரத்து அறிவிப்பு!

 

 

ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், ராகுல் சாஹர் தனது மனைவி இஷானி லோஹருடன் விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பதிவில், இளம் வயதில் திருமணம் செய்துகொண்டதாகவும், கடந்த 15 மாதங்களாக சட்டநடவடிக்கைகள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “சில உறவுகள் வாழ்க்கை முழுவதும் நீடிக்காது; அவை பாடம் கற்பிக்க வந்தவை” என்றும் தெரிவித்துள்ளார். 2019ல் நிச்சயதார்த்தம் செய்து, 2022 மார்ச் 9ல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்துள்ளனர்.

2019ல் இந்திய அணிக்காக அறிமுகமான ராகுல் சாஹர், 6 டி20 மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். மொத்தம் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 2021க்குப் பிறகு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஐபிஎலில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த புதிய கட்டத்தில் அவர் எப்படி செயல்படுவார் என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!