ஜனவரியில் ராகுல்காந்தி தமிழகம் வருகை!
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 2026 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மக்கள் சந்திப்பு, நடைபயணம் உள்ளிட்ட செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். அவர் பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாட்டை ஒருங்கிணைக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். நிதி, வரவேற்பு, விளம்பரம், பிரச்சாரம், மாநாட்டு திடல், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மூத்த நிர்வாகிகள் பொறுப்பேற்கவுள்ளனர்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்கும் மகளிர் பேரணிக்கான ஒருங்கிணைப்புக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிமணி எம்.பி., சுதா ராமகிருஷ்ணன் எம்.பி., கே.ராணி முன்னாள் எம்.பி., ஹசீனா சையத் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் 2026 தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!