இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்... ராகுல் காந்தி காட்டம்!
இந்தியா–அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி, அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடமிருந்து அதிக அளவு எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. பதிலாக அமெரிக்கா இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்து, இந்தியா அமெரிக்கா மீதான வரிகளை பூஜ்ஜியமாக்கவும் உறுதி செய்துள்ளது.
மேலும், எரிசக்தி, தொழில்நுட்பம், நிலக்கரி, விவசாயத் துறைகளில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களை இந்தியா வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் ரஷ்யா–உக்ரைன் போர் சூழலில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி உத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து நாட்டின் நலன்களைச் சமரசம் செய்துள்ளதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவுடன் நீண்டகால நட்புறவை இழப்பது, குறைந்த விலை எண்ணெய் இறக்குமதியை தவறவிடுவது இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தையும், எரிசக்தி பாதுகாப்பையும் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!