பிரபல நடிகை சகோதரருக்கு கொக்கைன் வழக்கில் போலீஸ் வலை வீச்சு!
கடந்த 2024 ஜூலை மாதம் போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் தெலுங்கு நடிகர் அமன் பிரீத் சிங் சிக்கினார். மருத்துவ பரிசோதனையில் கொக்கைன் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. அவர் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஐதராபாத் மாசப் டேங்க் பகுதியில் நடந்த வாகன சோதனையில் இரண்டு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 43.7 கிராம் கொக்கைன் மற்றும் 11.5 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அமன் பிரீத் சிங் இவர்களிடம் நிரந்தர வாடிக்கையாளராக இருந்து, குறைந்தது ஐந்து முறை போதைப்பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.
இதனை ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கைதிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ததற்கான டிஜிட்டல் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அமன் பிரீத் சிங்கைக் கைது செய்ய ஐதராபாத் போலீசும் ஈகிள் சிறப்புப் படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!