undefined

ரயில்ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால்  3% நேரடி தள்ளுபடி!

 

ரயில்வேயில் எண்ம பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ரயில்ஒன்’ செயலி மூலம் வாங்கப்படும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

இதுவரை ‘ரயில்ஒன்’ செயலியில் ‘ஆர்-வாலட்’ மூலம் டிக்கெட் வாங்கினால் மட்டும் 3 சதவீத கேஷ்பேக் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து வகையான எண்ம பணப் பரிமாற்ற முறைகளிலும் டிக்கெட் வாங்கினால், 3 சதவீத நேரடி தள்ளுபடி கிடைக்கும். இதனால் பயணிகளுக்கு உடனடி நன்மை கிடைக்கும்.

இந்த மாற்றங்களை செயலியில் அமல்படுத்த ரயில்வே தகவல் அமைப்பு மையத்துக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாடு மற்றும் பயணிகளின் வரவேற்பு குறித்து அடுத்த ஆண்டு மே மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சலுகையை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!