முன்னாள் ரயில்வே அமைச்சர் காலமானார்...!
முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து இந்திய திரிணாமுல் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான அவர்,மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராகவும், மூலோபாய வல்லுநராகவும் செயல்பட்டார். மத்திய ரயில்வே அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
பின்னர் அரசியல் மாற்றமாக பாரதீய ஜனதா பார்ட்டியில் இணைந்த அவர், அதன் பின் மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். அவரது அரசியல் பயணம் பல திருப்பங்களை கண்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!