2026ம் ஆண்டுக்கான ரயில்வே RRB தேர்வு அட்டவணை வெளியானது - முழு விவரம்!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயில் (Indian Railways) வேலை பெற வேண்டும் என்ற கனவில் லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! ரயில்வே தேர்வு வாரியம் (RRB - Railway Recruitment Board), 2026 ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணையை (Annual Planner) தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் தாங்கள் விரும்பும் ரயில்வே பணிகளுக்கு முன்கூட்டியே தயாராக முடியும்.
ரயில்வேயில் பணிபுரிவோருக்குக் கை நிறையச் சம்பளம், கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் நிரந்தரப் பணிப் பாதுகாப்பு கிடைக்கிறது. லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர் எனப் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அட்டவணை வெளியானதால், தேர்வர்கள் தங்களது தயாரிப்பைத் துல்லியமாகத் திட்டமிட முடியும்.
ரயில்வேயில் எப்போது, எந்தப் பணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்ற விவரம் இந்த அட்டவணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமான பணிகளுக்கான அறிவிப்புத் தேதிகள் இங்கே:
பிப்ரவரி: உதவி லோகோ பைலட் (ALP) பணிக்கு அறிவிப்பு.
மார்ச்: டெக்னிஷியன் பணிக்கு அறிவிப்பு வெளியாகும்.
ஏப்ரல்: செக்ஷன் கண்ட்ரோலர் பணிகள்.
ஜூலை: பாராமெடிக்கல் பிரிவு மற்றும் ஜூனியர் என்ஜினியர் (JE) பணிகளுக்கு ஒரே நேரத்தில் அறிவிப்பு.
ஆகஸ்ட்: நான் டெக்னிக்கல் பாப்புலர் கேட்டகிரிஸ் (NTPC - பட்டப்படிப்பு) அறிவிப்பு.
செப்டம்பர்: அமைச்சகம் மற்றும் Isolated Categories பணிகள்.
அக்டோபர்: அதிக காலியிடங்கள் கொண்ட குரூப் டி லெவல் 1 பணிக்கு அறிவிப்பு வெளியாகும்.
குரூப் டி-க்கு ஏன் அதிக எதிர்பார்ப்பு?
ரயில்வே நடத்தும் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான காலியிடங்கள் வழக்கமாக இந்த குரூப் டி (லெவல் 1) பிரிவில்தான் அறிவிக்கப்படுவது வழக்கம். இதனால், பத்தாம் வகுப்பு தகுதி உள்ளவர்கள் முதல் உயர் கல்வி முடித்தவர்கள் வரை இந்தத் தேர்வுக்காகப் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள்.
இந்த ஆண்டு அட்டவணை வெளியானதையடுத்து, ரயில்வே வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வர்கள் இப்போதே உற்சாகத்துடன் தங்களைத் தயார் செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!