அடுத்த 3 மணி நேரம் ... தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!
தமிழகத்தின் பல பகுதிகளில் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வரும்மூன்று மணி நேரத்துக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற பகுதிகளிலும் மழை சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் தற்போது இலங்கை அருகே வலுப்பெற்று, நவம்பர் 30 அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரம் கடற்கரைமுகத்துக்கு சமிபமாக கடலைத் தொட்டுச் செல்லும் என ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் தாக்கத்தால் கடலோர பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் பரவலான காற்றழுத்தம் காரணமாக தமிழகக் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் அடுத்த சில நாட்கள் மழை தீவிரம் தொடரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்வது தவிர்க்குமாறும், கடற்கரை வாசிகள் முன்னெச்சரிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!