நாளை சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு திசை வளிமண்டல அலை மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று (ஜன.23) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், நகரின் சில பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (ஜன.24) கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
ஜன.25 மற்றும் 26 தேதிகளில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும். அதனைத் தொடர்ந்து ஜன.27 முதல் 29 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!