10 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு!
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரம் வரை கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக உள் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று இரவு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதுடன் கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!