நீலகிரி உட்பட 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜனவரி 27ஆம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
ஜனவரி 27 முதல் 31 வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
இதனிடையே மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் 60 கிலோ மீட்டரையும் எட்டலாம் என்பதால், அந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!