மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மேலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு !
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று மற்றும் மேக மூட்டத்துடன் சில பகுதிகளில் மிதமான மழை காணப்படுகிறது.
இதற்கிடையே, வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வானிலை மாற்றத்தை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கோயம்புத்தூர், தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் தற்காலிகமாக மழை தீவிரம் காணப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!