undefined

பிப்ரவரி 21, 22ம் தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (பிப்.19) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகம் சில பகுதிகளில் மழை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிப்.20-ல் தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். பிப்.21-ல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பிப்.22-ல் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்.20 அதிகாலை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். பிப்.19 முதல் 22 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!