undefined

மார்ச் 7 முதல் 9 வரை மிதமான  மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் பகல் நேரத்தில் வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். சில மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. வயதானவர்கள், கர்ப்பிணிகள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக 6ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7 முதல் 9 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான பனிமூட்டமும் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!