தமிழத்தில் 16ம் தேதி வரை  மிதமான மழைக்கு வாய்ப்பு!

 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென்தமிழகம் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.

மார்ச் 13 முதல் 16 வரை தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 17 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதற்கிடையில் மாநிலம் முழுவதும் வெப்பநிலை படிப்படியாக உயர வாய்ப்பு உள்ளது. மார்ச் 12 முதல் 15 வரை அதிகபட்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி வரை உயரக்கூடும். சென்னை நகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!