undefined

ராஜஸ்தான் அதிர்ச்சி... நள்ளிரவில் கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர் பலி; பலர் படுகாயம்!

 

ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வி மையமாகத் திகழும் கோட்டா நகரில், நேற்றிரவு ஒரு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கோட்டா நகரில் உள்ள ஒரு பழைய கட்டிடம் நள்ளிரவு நேரத்தில் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த அந்தப் பெரிய கட்டிடம், அதன் அருகே செயல்பட்டு வந்த ஒரு காபி கடை (Coffee Shop) மீது விழுந்ததால் விபத்தின் தீவிரம் அதிகரித்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாவட்ட ஆட்சியர் பியூஷ் சமரியா தலைமையிலான குழுவினர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இதுவரை இடிபாடுகளுக்குள் இருந்து 10 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 அல்லது 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முதற்கட்ட விசாரணையில், இடிந்து விழுந்த அந்தப் பழைய கட்டிடத்தின் அடித்தளம் மிகவும் பலவீனமாக இருந்ததே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடம் கோட்டா மக்களவைத் தொகுதியின் கீழ் வருவதால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் சிறப்புப் பணி அதிகாரி ராஜீவ் தத்தா மற்றும் பிற அரசு உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்துள்ளனர்.

கோட்டா நகரில் ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வரும் நிலையில், ஒரு மாணவர் பலியான சம்பவம் மற்ற மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!