அதிமுக கூட்டணிக்கு மடிப்பிச்சை எடுப்பதில்லை... ராஜேந்திர பாலாஜி !
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். டிடிவி தினகரன் கூட்டணிக்கு வந்ததால் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாக்குகள் முழுமையாக அதிமுகவுக்கு கிடைக்கும் என்றார்.
அதிமுக–பாஜக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சி அமைப்பார் என தெரிவித்தார். திமுகவை வீழ்த்தவே தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார் என்றும் கூறினார். கூட்டணிக்கு இன்னும் சிலர் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கூட்டணிக்காக அதிமுக மடிப்பிச்சை எடுக்கும் அளவுக்கு பலவீனமாக இல்லை என்றார். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றும், திமுகவும் ஆட்சியில் பங்கு கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டார்கள் என்றும் கூறினார். நாங்கள் பலவீனமல்ல என்பதை கூட்டணிக்கு வருபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!