2026 தேர்தலுடன் தவெக முடியும் ... ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!
தமிழக வெற்றிக் கழகம் களத்திலேயே இல்லை, பரிதாப நிலையில் உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார். 2026 தேர்தலோடு தவெக எனும் கட்சி முடிந்துவிடும் என்றும் அவர் கூறினார். தலைவர் விஜய் அரசியலில் புதியவர் என்பதால் கட்சி வலுவாக இல்லை என சுட்டிக்காட்டினார்.
திமுக–தேமுதிக கூட்டணியையும் அவர் தாக்கினார். இது கொள்கை கூட்டணி அல்ல, கொள்ளைக்கான கூட்டணி என்று குற்றம்சாட்டினார். கேப்டன் விஜயகாந்த் ஆரம்பித்த கட்சியின் நோக்கத்திற்கு மாறாக தற்போது நடப்பதாகவும், அதனால் தேமுதிக தொண்டர்கள் அதிமுகவில் இணைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
சிவகாசி திருத்தங்கல் பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், திமுக ஆட்சியில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார். அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!