நெல்சன் இயக்கத்தில் ரஜினி–கமல் இணையும் பிரமாண்ட படம்? ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக முன்பே தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்படத்தை முதலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், கதை காரணமாக அவர் இந்த திட்டத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க சென்றார். இதற்கிடையில் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்திற்குப் பிறகு கமல் ஹாசன் தயாரிப்பில் தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் திரைப்படம் உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்த நிலையில், அந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்திற்கான புரோமோ படப்பிடிப்புக்காக சிறப்பு செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி மற்றும் கமல் ஹாசன் இணைந்து ஒரே திரையில் தோன்றுவது அரிதான நிகழ்வாக இருப்பதால், இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்குவதாக தகவல் வெளியானதால், படத்தின் மீது உள்ள ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!