நல்லகண்ணு உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை காலை நேரில் சென்று நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ரஜினிகாந்த், “ நான் ஓமந்தூரார், அண்ணா, காமராஜர், கக்கன் ஆகியோரைப் பார்த்ததில்லை. அவர்கள் அனைவரையும் சேர்த்தது போல நல்லகண்ணுவை பார்க்கிறேன். நல்லவராக, எளிமையாகவும் நேர்மையாகவும் இருந்தால், மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு நல்லகண்ணு ஒரு எடுத்துக்காட்டு. தோழர் நல்லகண்ணுவுக்கு வீரவணக்கம்” எனத் தெரிவித்தார்.முன்னதாக, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் நாசர், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!