undefined

மாநிலங்களவை தேர்தல்...  திமுக வேட்பாளர்கள், கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்..!

 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக 3 இடங்கள் , மக்கள் நீதி மையம் ஒன்று, அதிமுக 2 இடங்களை அறிவித்துள்ளன. அதன்படி தி.மு.க சார்பில், தற்போதைய எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் ,  மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.  

இன்று முதலமைச்சர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.  
அதன்படி,  எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதல்வர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  12 மணிக்கு  வேட்புமனு தாக்கல் செய்தனர்.  உறுதிமொழியேற்று அனைவரும் வேட்புமனுவில் கையெழுத்திட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது