மாநிலங்களவை தேர்தல்: மநீம கமல், அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
இன்று அதிமுக வேட்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான மதிமுகவைச் சேர்ந்த வைகோ, திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பாமகவின் அன்புமணி ராமதாஸ், அதிமுக சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தனபால் ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை இன்று நண்பகல் 12.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
அதே போல, திமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கமல்ஹாசனும் தங்களது வேட்புமனுக்களை இன்று ராகு காலம் முடிந்ததும் தாக்கல் செய்ய உள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!