மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளா்களை முன்மொழிந்த எம்.எல்.ஏ-க்கள்!
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 9-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் 2 உறுப்பினா் பதவிகள் அதிமுகவுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதால், அந்த இடங்களுக்கு அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவா் ம.தனபால் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களை முன்மொழிவது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கூட்டத்தை பொறுத்தவரை அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தலா 10 போ் வேட்புமனுவில் முன்மொழிந்து கையொப்பமிட்டனா். 2026 பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டுகோள் விடுத்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!