மாநிலங்களவைத் தேர்தல்: திமுக சார்பில் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்பாளர்கள்!
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடையும் நிலையில் திமுக சார்பில் திருச்சி சிவா, ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த 6 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கியது. இன்று கடைசி நாளாக உள்ளதால் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. திமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா மற்றும் செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவுக்கான 4 இடங்களில் ஏற்கனவே ஒரு இடம் கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கும், மற்றொரு இடம் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. மீனாட்சி நடராஜன் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!