ராம நவமி ஊர்வலத்தில் கல்வீச்சு...கடைகள் சூறையாடல்... 144 தடை உத்தரவு!
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது திடீரென ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் திடீரென கடைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டது. கடைகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடியதோடு, பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தத் திடீர் மோதலில் ஊர்வலத்தில் பங்கேற்ற பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த நசிமுதீன் ஷேக் என்பவர் கூறுகையில், "ஊர்வலத்தில் புகுந்த சில சமூக விரோதிகள் என் மாமாவின் கடைக்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கினர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிவிட்டு, கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டனர்" என வேதனையுடன் தெரிவித்தார். வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து, முர்ஷிதாபாத் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் ஒன்று கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன்முறை நடந்த இடங்களில் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து மத்தியப் பாதுகாப்புப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய போலீசார் முக்கியச் சந்திப்புகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால், நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. வதந்திகள் பரவுவதைத் தடுக்க இணையச் சேவைகள் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதியை நிலைநாட்ட அரசு எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!