டிசம்பர் 30ம் தேதி பாமக கூட்டணி அறிவிப்பு... ராமதாஸ் திட்டவட்டம்!
பா.ம.க. உள்கட்சி பிளவு வெளிப்படையாகும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜி.கே.மணி, தீரன், முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 108 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இரண்டு தரப்பாகப் பிரிந்துள்ள கட்சியின் தற்போதைய சூழ்நிலையைக் குறித்து ராமதாஸ் நேரடியாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
கூட்டணியைப் பற்றிய முக்கிய ஆலோசனையும் இதில் நடைபெற்றது. எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும், எந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதற்கான கருத்துகளை நிர்வாகிகளிடம் ராமதாஸ் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், டிசம்பர் 30-ம் தேதி ஆத்தூர் தலைவாசலில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி முடிவு எடுக்கப்படும் எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்தும் ராமதாஸ் கடுமையாக பதிலளித்தார். இதற்காக டிசம்பர் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். கட்சியின் அடுத்தடுத்த அரசியல் முடிவுகள் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் அமையும் எனவும் அவர் உறுதிபடுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!