மாம்பழ சின்னம் … மேடையில் வெடித்த அரசியல் சர்ச்சை... ராமதாஸ் கொந்தளிப்பு!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் மேடை பின்னணியில் பாமகவின் அடையாளச் சின்னமான மாம்பழம் இடம் பெற்றது தான் சர்ச்சைக்கு காரணமானது.
இந்த சின்னம் தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது அனுமதி இல்லாமல் மாம்பழச் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், தேர்தல் ஆணையத்தில் வழக்கில் உள்ள சின்னத்தை பொதுக்கூட்டத்தில் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இப்படி நடந்திருப்பது பிரதமர் பதவிக்கே இழுக்கு என்றும், இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்கனவே கடும் உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்ததாக அறிவித்த நிலையில், இந்த மாம்பழ சின்ன விவகாரம் மீண்டும் பிளவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த சர்ச்சையால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கை முக்கியத்துவம் பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!