“என்னை ஒழிக்க சதி”... பாமகவில் உள் பிளவு தீவிரம்... ராமதாஸ் குற்றச்சாட்டு!
பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியில் நீடித்து வரும் உள் மோதல் குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தலைமைத்துவம் மற்றும் மாம்பழச் சின்னம் தொடர்பான சர்ச்சை இன்னும் அடங்கவில்லை. தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்கு அங்கீகாரம் வழங்கியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ராமதாஸ் தரப்பு ஏற்க மறுத்து வரும் சூழலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
“பொய் பேசுவதையே அரசியலாகக் கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்” என்று ராமதாஸ் கூறினார். அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். நீக்கப்பட்டவர்கள் தற்போது தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மனம் புண்படும் வகையில் திட்டமிட்டு பேசுகின்றனர் என்றும் அவர் சாடினார்.
“அரசியலில் இருந்து என்னை ஒழிக்க முயற்சி நடக்கிறது” என்று ராமதாஸ் அதிரடியாக கூறினார். 26 ஆண்டுகள் உழைத்த ஜி.கே.மணியையும் விமர்சித்து வருவது வருத்தமளிக்கிறது என்றார். இந்த விவகாரம் பாமகவின் தந்தை-மகன் மோதலை மீண்டும் முன்வைத்துள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு இந்த உள் பிளவு கட்சிக்கு பாதிப்பா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!