இலங்கை சிறையில் ராமேஸ்வரம் மீனவர்கள்… நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!