undefined

 ராமேஸ்வரம் சிறப்பு ரயில்… பயணிகளுக்கு கூடுதல் வசதி!

 
 

ராமேஸ்வரம்–தாம்பரம் மற்றும் தாம்பரம்–ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து கூடுதல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

06105/06106 என்ற எண் கொண்ட இந்த சிறப்பு ரயில்களில்,  13 மற்றும் 14-ந் தேதிகளில் கூடுதலாக 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட் பற்றாக்குறை சற்று குறையும் என ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட பெட்டி அமைப்பில் 3 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இடம் பெறுகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான 1 இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1 லக்கேஜ் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!