undefined

அபூர்வ வழிபாடு.. 1000 லிட்டர் நெய்யில் குளித்த மாயூரநாதர்.. 1000 ஆண்டு பழமையான ஆலயத்தில் விசேஷ வழிபாடு! 

 

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வாக சுவாமிக்கும் அம்பாளுக்கும் தாரை தாரையாக நெய் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த வழிபாட்டிற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான புராணக் கதை உள்ளது. பார்வதி தேவி மயில் உருவம் கொண்டு சிவபெருமானை வழிபட்ட தலம் இது. மயில் உருவம் நீங்கி மீண்டும் சுய உருவம் பெற்ற அம்பாள், மிகுந்த மகிழ்ச்சியுடன் சிவபெருமானுக்குத் தனது கைகளால் நெய் அபிஷேகம் செய்ததாக மயூரபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த ஐதீகத்தைப் போற்றும் வகையிலேயே இந்த விழா நடத்தப்படுகிறது.

மாயூரநாதர் நற்பணி மன்றத்தின் சார்பில் கடந்த 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த நெய் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. விரதமிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய சுமார் 1,000 லிட்டர் தூய நெய் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. மாயூரநாதர், அபயாம்பிகை மற்றும் ஆதிமாயூரநாதர் ஆகிய மூர்த்திகளுக்கும் இந்த நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.

நெய் தவிர பால், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களாலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவின் முடிவில் மகா தீபாராதனை காட்டப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்ட அந்தப் புனிதமான நெய் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!