undefined

அதிகாரப்பூர்வமாக திருமணத்தை அறிவித்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்!

 

நீண்ட காலமாகவே ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நேற்று மாலை இந்த நட்சத்திர ஜோடி தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாகத் திருமணத்தை உறுதி செய்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வமான ஒரு சிறப்பு வீடியோ, புகைப்படத்தைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்களது திருமணம் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பிரம்மாண்டமான நிகழ்வாக இருக்குமா அல்லது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடக்குமா என்பது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் இந்த ஜோடிக்குத் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒருவரான இவர்களின் திருமணம், இந்த ஆண்டின் மிக முக்கியமான சினிமா நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!