ராஷ்மிகா , விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது?
நடிகை ராஷ்மிகா மந்தனா – நடிகர் விஜய் தேவரகொண்டா காதல் விவகாரம் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இருவரும் இதை ஒருபோதும் வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை. காதல் என்பது வெறும் புரளி என்றே இதுவரை பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025 அக்டோபர் மாதத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு, மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுவரை எந்தப் புகைப்படமோ, சமூக வலைதள பதிவோ வெளியாகவில்லை.
இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, திருமண தேதி எப்போது என்ற கேள்வி தான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. தகவல்களின்படி, இருவரின் இல்லற வாழ்க்கை தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!