undefined

 உதய்பூரில்  விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்?  … ரசிகர்கள் உற்சாகம்!

 
 

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில் நடைபெறும் என்றும், இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்வை ஆவணப்படமாக பதிவு செய்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஷ்மிகா தற்போது சினிமாவில் பிஸியாக இருப்பதும், இந்த திருமணம் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றிருப்பதும் காரணமாக இந்த ஆவணப்படத்திற்கு பெரிய தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது இந்திய சினிமாவில் பேசப்படும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிப்ரவரி 2ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்ற தகவல் வெளியான நிலையில், ராஷ்மிகா அதனை மறுத்திருந்தார். தற்போது பிப்ரவரி 26ஆம் தேதி குறித்து தகவல்கள் பரவி வரும் நிலையில், இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!