திருமணம் வணிகமல்ல ... 60 கோடியை நிராகரித்த விஜய்–ராஷ்மிகா நட்சத்திர ஜோடி!
தெலுங்கு திரையுலகின் பிரபல ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது திருமண வீடியோவை விற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக காதலில் உள்ள இந்த ஜோடிக்கு வரும் 26ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஐதராபாத்தில் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்குப் பிறகு ஐதராபாத்தில் திரையுலக நண்பர்களுக்காக பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர திருமணத்தை ஒளிபரப்ப பிரபல ஓடிடி தளம் ஒன்று ரூ.60 கோடி வழங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா உள்ளிட்ட சில பிரபலங்களின் திருமணங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், விஜய் இந்த வாய்ப்பை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
‘திருமணம் என்பது மிகவும் தனிப்பட்ட மற்றும் விலைமதிப்பற்ற நினைவு’ என விஜய் தெரிவித்துள்ளார். தனது திருமணத்தை வணிக ரீதியாக மாற்ற விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கோடிக்கணக்கான தொகையை விட தனிப்பட்ட மகிழ்ச்சிக்கே முன்னுரிமை அளித்த இந்த முடிவு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!