undefined

திருப்பதியில் ரதசப்தமி கோலாகலம்... 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதியுலா... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

 

திருமலை ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மிக முக்கியமான உற்சவங்களில் ஒன்றான ரதசப்தமி, இன்று அதிகாலை முதல் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் இரவு வரை மலையப்ப சுவாமி பின்வரும் 7 வாகனங்களில் மாடவீதிகளில் பவனி வருகிறார்:

சூரிய பிரபை வாகனம் காலை 5:30 - 8 மணி வரையில் முதல் வாகன சேவையாக, ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் செந்நிற வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்து சுவாமி எழுந்தருளினார். லேசான சாரல் மழை மற்றும் மேகமூட்டத்திற்கு இடையே 7:15 மணிக்குச் சூரிய உதயத்தின் போது மகா தீபாராதனை காட்டப்பட்டது.

சின்னசேஷ வாகனம் காலை 9 - 10 மணி வரையில் நாக வாகனத்தில் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருட வாகனம் (காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையில் வாகன சேவைகளில் மிக முக்கியமான கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதிகளில் உலா வந்தார். அனுமந்த வாகனம் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையில் ஆஞ்சநேயர் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி பகல் 2 மணிக்கு மேல் புஷ்கரணியில் கோவில் தெப்பக்குளம் சக்கரத்தாழ்வாருக்குப் புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நீராடினர்.

கற்பக விருட்ச வாகனம் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், சர்வபூபால வாகனம் மாலை 6  மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடந்தது. சந்திரபிரபை வாகனம் இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!