undefined

 ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... இன்று தாயுமானவர் விநியோகம் கடைசி நாள்! 

 

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு மூன்று முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் இன்று (டிசம்பர் 3) வரை மட்டுமே வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக வீடுகளிலேயே பொருட்கள் சேர்க்கப்பட்டு வந்த இந்த சேவை, இந்த மாதத்திற்கான பணி இன்றுடன் நிறைவடைகிறது. வீட்டிற்கு வந்தபோதும் பெறாதவர்கள், குடும்ப உறுப்பினர் மூலமாக ரேஷன் கடையில் நேரடியாகப் பெற்று கொள்ளலாம். அடுத்த மாதம் மீண்டும் வீட்டு விநியோகம் நடைபெறும்.

இதற்கிடையில், ரேஷன் கார்டு (ஒரிஜினல்) தொலைந்துபோனவர்களுக்கான முக்கிய வசதி – நகல் குடும்ப அட்டை ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 7,38,778 நகல் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம் ரூ.50 மட்டுமே. tnpds.gov.in தளத்தில் சென்று ‘நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க’ என்பதைத் தேர்வுசெய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்தால் போதும். அட்டையை நேரில் சென்று பெற வேண்டியதில்லை; ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கே அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

மேலும், ரேஷன் கடைகளின் செயல்பாடுகளை இணையவழி கண்காணிக்கும் முறையை அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் நடவடிக்கைகள் முழுமையாக மின்னணுமயமாக்கப்பட்ட நிலையில், MIS, Portal, IMPDS போன்ற இணைய தளங்களின் மூலம் கண்காணித்தல் அவசியம் என அரசு வலியுறுத்தியுள்ளது. விற்பனை முனைய கருவிகளை அலுவலகங்களுக்கு கொண்டு வரவோ, அத்தியாவசியப் பொருட்களின் விநியோக விவரங்களை கைஎழுத்தில் எழுதிக்கொடுக்க வற்புறுத்தவோ கூடாது எனக் கூறி கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு கடும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!