சூப்பர் ... ஏ.டி.எம். மூலம் ரேஷன் பொருட்கள்... !
ரேஷன் பொருட்கள் வழங்கும்போது எடை குறைவு, வாங்காத பொருட்கள் பதிவாகுதல் போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய மின்னணு முறையை கொண்டு வர முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் குஜராத் மாநிலத்தின் சில மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
புதிய முறையில், ரேஷன் அட்டையாளர் பெற வேண்டிய பொருட்களுக்கான கூப்பன் அவர்களின் கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி கடையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதனால் தேவையற்ற பதிவு, தவறான விநியோகம் ஆகியவை தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் 24 மணி நேரமும் பொருட்கள் பெற ‘அன்னபூர்ணா’ என்ற இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கண் கருவிழி அல்லது விரல் ரேகை பதிவு செய்து பொருட்களை பெறலாம். குறியீட்டு சின்னம் மூலமாகவும் வாங்க முடியும். 35 விநாடிகளில் 25 கிலோ பொருட்கள் வழங்கும் இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!