நடிகை கெனிஷாவுடன் ரவிமோகன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் - தை அமாவாசையில் அண்ணாமலையார் கோவிலில் வழிபாடு!
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இன்று (ஜனவரி 18) தை அமாவாசையை முன்னிட்டுத் திரை பிரபலங்கள் மற்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
'பொன்னியின் செல்வன்', 'அடங்க மறு' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் ரவி மோகன், இன்று அதிகாலை தனது தோழி கெனிஷாவுடன் கோவிலுக்கு வருகை தந்தார். இருவரும் முதலில் சம்பந்த விநாயகரை வணங்கித் தங்களது வழிபாட்டைத் தொடங்கினர்.
பின்னர் உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு மனமுருகி வேண்டினர். இவர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கோவிலில் நடிகர் ரவி மோகனைக் கண்ட ரசிகர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரும் புன்னகையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!