நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – ஆர்.பி.ஐ ஆளுநர் சந்திப்பு... பெரும் பரபரப்பு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை (பிப்.11) நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்ததை நிதியமைச்சரின் அலுவலகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மேலும், மத்திய நிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா தலைமையிலான குழுவையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு அதிகாரப்பூர்வ மற்றும் பொருளாதார தொடர்பான விஷயங்களை பற்றி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த பிப்.1 அன்று 2026–2027 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வெளியான நிலையில், நிதியமைச்சரும் ஆர்.பி.ஐ ஆளுநரும் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை, வட்டி விகிதம் மற்றும் நிதி கொள்கைகள் குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!