சிஎஸ்கே-வின் சாதனையை சமன் செய்து ஆர்சிபி அதிரடி வெற்றி!
நேற்று (ஏப்ரல் 12, 2026) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த ஸ்கோரை அதிகமுறை வெற்றிகரமாகத் தற்காத்த அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சாதனையை பெங்களூரு அணி சமன் செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, பில் சால்ட் (78), கேப்டன் ரஜத் படிதார் (53) மற்றும் விராட் கோலி (50) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது. 241 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (71) மற்றும் ஹர்திக் பாண்டியா (40) ஆகியோரின் போராட்டத்திற்கு மத்தியிலும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 200+ ரன்களைக் குவித்து அதனைத் தற்காத்து வெற்றி பெற்ற பட்டியலில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் 23 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 18 வெற்றிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குறிப்பாக, ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் தலா 36 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து அந்தப் பட்டியலிலும் சமநிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த போட்டிகளில் இந்தச் சாதனையைத் தகர்த்து எந்த அணி தனித்து முதலிடம் பிடிக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!