2026 தேர்தலுக்கு தயார்... 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நிறைவு!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் தனது தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 11ம் தேதி தொடங்கிய இந்த முதற்கட்டச் சரிபார்ப்புப் பணிகள், சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றது. நேற்றைய தினத்துடன்இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாதுகாப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள், பெல் (BEL) நிறுவனப் பொறியாளர்களால் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் மூலம் தயார் நிலையில் உள்ள இயந்திரங்களின் எண்ணிக்கை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் : 1.75 லட்சம், கட்டுப்பாட்டு அமைப்புகள்: 1.10 லட்சம், விவிபேட் இயந்திரங்கள்: 1.16 லட்சம்
தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையைப் பேணும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. இயந்திரங்களின் மென்பொருள் மற்றும் வன்பொருள் சரியாக இயங்குகிறதா என்பது உறுதி செய்யப்பட்டு, பின் அவை சீல் வைக்கப்பட்டன.
முதற்கட்டச் சரிபார்ப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்ததாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, எந்தத் தொகுதிக்கு எந்த இயந்திரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்கான 'ரேண்டமைசேஷன்' முறை மேற்கொள்ளப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!