undefined

நாளை 2 மாவட்டங்களுக்கு ரெட்,  9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்    2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!

 


 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில்  வடக்கு கர்நாடக கடல்பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  ஜூன் 14 முதல் 17 ம் தேதி வரையில் கேரளத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் கனமான காற்று வீசக்கூடும் என்பதால், கேரளம் - கர்நாடகம் - லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இன்று ஜூன் 13 கேரளத்தின் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, கனமழை அதிகரிக்கக் கூடும் என்பதால் ஜூன் 14ம் தேதி, 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.நடப்பாண்டில் கேரளத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில்  அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் அப்பகுதிகளில்  உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது